நாகர்கோவில்:

ளியக்காவிலை ஸ்பெஷல் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிலை அருகே உள்ள சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2 நாட்களுக்கு முன்வு இரவு பயங்கரவாதிகளில், கத்தியால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் கேரளாவுக்கு தப்பிவிட்டதாககூறப்படுகிறது.

இதுகுறித்து 10 தனிப்படைகள் அமைத்துள்ள காவல்துறை, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ5 லட்சம் சன்மானம் தருவதாக கேரள அரசும், ரூ.2 லட்சம் பரிசு தருவதாக தமிழக காவல்துறையும் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நேற்று பாலக்காடு பகுதியில் கோவையைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கும் பயங்கரவாதி தவுபீக்குடன் அடிக்கடி போனில் பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள பூத்துறையில் மற்றொருவர் பிடிபட்டார். இவர், நெல்லையைச் சேர்ந்தவர். எஸ்.ஐ. வில்சன் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறியுள்ள தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்,  இதுவரை 6 பேர் பிடிபட்டு உள்ளதாகவும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார்  விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை  நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் இருவரும் விரைவில் சிக்குவார்கள் என்றும் நம்பிக்கை  தெரிவித்தார்.