சிம்லா:

ந்தியாவின் முதல்வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ள 103வயது முதியவர் ஷியாம் நேகி  17வது முறையாக நாளை தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளர்.

நாட்டின் மிக மூத்த வாக்காளரும், தேர்தல் ஆணையத்தின் வாக்கு விழிப்புணர்வு பிரசாரகருமான ஓய்வு பெற்ற ஆசிரியர், ஷியாம்நேகி,  நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவில் 17வது முறையாக தனது வாக்கினை செலுத்துகிறார்.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் 273 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி. வரும்  ஜூலை மாதம் தனது 103 வயதை எட்டுகிறார்.. இவருக்கு 3 மகன்களும், 5 மகள்களும், எண்ணற்ற பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

இவர்  இளையோர் அடிப்படை ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில், 1975ம் ஆண்டு ஓய்வு பெடு நடைபெற்றது முதல் தற்போது வரை தனது வாக்கினை தனது தொகுதியான  கின்னார் தொகுதியில் செலுத்தி வருகிறார். தற்போது 17வது முறையாக தனது வாக்கினை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைக்க உள்ளார்.

இவரை தேர்தல் ஆணையம் ,  வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முறையான வாக்காளர் பயிற்சி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின்படி, தேர்தல்ஆணையத்தின் விளம்பர தூதராக  நியமித்துள்ளது.

அனைவரும் வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் நேகி,  “எல்லா வாக்காளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தேர்தலில் வாக்களிக்க கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். நாட்டை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்லும் நேர்மையான வாக்காளரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்.

ஷியம் நேகி தவிர்த்து நாடு முழுவதும் 998 வாக்காளர்கள் 100வயதை எட்ட உள்ளனர். இவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் தனி வசதி செய்து தரப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.