இந்தி் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் – ஜெயா பச்சன் மகளும், அபிஷேக் பச்சனின் சகோதரியுமான ஸ்வேதா, பேஷன் டிசைனராக இருக்கிறார்.
அவரிடம், ஐஸ்வர்யா ராயிடம், உங்களுக்கு பிடித்த குணம் என்ன? பிடிக்காத குணம் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்வேதா “ஐஸ்வர்யா ராய், தன்னைத்தானே உருவாக்கிக்கொண்ட வலிமையான பெண்” என குறிப்பிட்டார்.
“எப்போது போன் செய்தாலும், உடனடியாக போனை எடுக்க மாட்டார். மெசேஜும் அனுப்ப மாட்டார். இது எனக்கு ஐஸ்வர்யாவிடம் பிடிக்காத குணம்” என்று பதில் அளித்தார்.
“அண்ணன் அபிஷேக், குடும்பத்தின் மீது வைத்திருக்கும் நேசம், பிடித்த குணம். பெற்றோருக்கு நல்ல மகனாக மட்டும் அல்லாமல், மனைவிக்கும் அன்பான கணவனாக இருப்பவர்” என்று குறிப்பிட்ட ஸ்வேதா, “எல்லாம் தெரிந்தவர் போல் காட்டிக்கொள்வது, பிடிக்காத குணம்” என தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி