டில்லி:

லக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற  25-வது  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கணை இறுதிப்போட்டியில், ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார்.  இதில், 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

42 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சாதனையை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டுவீரர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தாயகம் திரும்பிய பி.வி.சிந்து, இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அதைத்தொடர்ந்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியாவின் பெருமை, ஒரு தங்கத்தையும் ஏராளமான பெருமையையும் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த சாம்பியன் பி.வி.சிந்து.  அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.