1978 ம் ஆண்டு C.ருத்ரய்யா இயக்கி தயாரித்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.

‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பத்ரி வெங்கடேஷ் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அடுத்ததாக ரஜினி – கமல் – ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ‘அவள் அப்படித்தான்’ படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

சாதாரண பின்னணியில் இருந்து பாலியல் தொல்லை, அடிமைத்தனம் போன்ற தடைகளை தகர்த்து முன்னுக்கு வரும் இளம்பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று ஸ்ரீப்ரியா நடித்திருந்தார் அதற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது கிடைத்தது.

இந்தப் படத்தின் ரீமேக்கில் ரஜினி ரோலில் சிம்பு மற்றும் கமல் ரோலில் பஹத் பாசில் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்துக்கு ஸ்ருதிஹாசனை நடிக்க வைப்பதில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தீர்மானமாக உள்ளார்.

[youtube-feed feed=1]