ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் , நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார்.

மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், தர்பார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஸ்ரேயா சரண் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார் .அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் கெயின் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனால் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து, தர்பார் குழுவினர் கூறுகையில், ஸ்ரேயா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மாறாக, தர்பார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ரஜினியை சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.