விஷால் நடிப்பில் பெரும் பிரச்சனைக்கு பின் கடந்த வாரம் வெளியானது அயோக்யா.
இதற்கு பின் அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் விஷால். முதலில் இது ‘இரும்புத்திரை 2’ என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கதை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே 13’ சமீபத்தில் ரிலீஸானது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா என்பது குறிப்பிடத்தக்கது.