சென்னை:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற வந்த நிலையில், 1 ரன் வித்தயாசத்தில் சென்னை அணி தனது வெற்றி வாய்ப்பை நழுவி விட்டது.

இது சென்னை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையிலும், ‘எப்போதும் நம்ம தல தோனிதான்:’  சிஎஸ்கே கேப்டன்  தோனிக்கு ஆறுதல் கூறுவது மட்டுமின்றி,  இன்னும் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை வென்று வர வேண்டும் என்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபில் இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் சிஎஸ்கே வீரர் ரெய்னாவின் தான்தோன்றித்தனமான ஆட்டத்தாலும், தோனியின் ரன்அவுட் சர்ச்சைக்குரிய  வகையில் கொடுக்கப்பட்டதாலும் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதுபோல சிஎஸ்கே அணியினரும் சோகமயமாக காட்சியளித்தனர்.

இந்த நிலைவில் அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், தோனிதான் சிஎஸ்கே வின் தல என்றும், அவர்களுக்கு  சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரின் ஆதரவும் உள்ளது என்று பல திரையுலக பிரமுகர்கள் தங்களது ஆதரவை சமூக வலைதளம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நட்சத்திரமான  அபிஷேக் பச்சன்,  மும்பைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திரந்த நிலையில், சிஎஸ்கே வின் ஆட்டம் நன்றாக இருந்ததாகவும், அவர்களின் முயற்சியும் கடுமையாக இருந்தது என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரபல ஊடக தொகுப்பாளரான  கோபிநாத்,  சிஎஸ்கேவின் விட்டுக் கொடுக்காத அணுகுமுறைய பாராட்டுவதாக தெரிவித்து உள்ளவர், நேற்யை போட்டி சிறப்பாக அமைந்ததாகவும்,  பும்ராவும் மலிங்காவும் பெரும் முயற்சி செய்து விளையாடினார்கள் என்று தெரிவித்திருந்த நிலையில், கவலைப்படவேண்டாம் வாட்ஸன்.. வாழ்த்துகள். பும்ராவின் யாக்கர்களை உலகக் கோப்பையில் எதிர்பார்க்கிறேன். சிறந்த தொடருக்கு நன்றி தோனி என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நேற்றைய ஆட்டத்தில் தோனி அவுட் செய்யப்பட்டதை விமர்சித்துள்ளார், அதில், தல நாட் அவுட்… தவறான அம்பயரிங் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், சென்னை டீம் நன்றாக விளையாடியது. தான்  சிஎஸ்கே ஃபேன் என்பதில் பெருமை. தல தோனிக்கும் டீமுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.  நாங்கள் உங்களை எப்போதும் நேசிக்கிறோம், நேசிப்போம். வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளவர், மஞ்ச்ரேக்கரின் கமென்டரி  கேவலமாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இயக்குநர் ரத்னகுமார் பதிவில்,  மலிங்கா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற திறமையான பவுலர்கள்  இருந்தால் மோடி கூட தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியும். ஆனால் தோனியால் மட்டுமே சிஎஸ்கே ஃபைனல்ஸ் வரை வரமுடியும். தோனி ஃபார் லைஃப்.. இன் சிஸ்கே என்று தெரிவித்து உள்ளார்.

நடிகர் சரத்குமார் பதிவில்,   மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தோனியின் அவுட் சர்ச்சைக்குரியது, இது  அம்பயரிங் மீது ஒரு களங்கமாகவே இருக்கும் என்று சாடியிருப்பவர்,  சந்தேகம் அதிகமாக இருந்தால், பேட்மேனுக்கே பலன் சென்றிருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு தனது பதிவில்,  சிறந்த ஐபிஎல் ஃபைனல்களில் ஒன்று. நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ், இப்படிக்கு தீவிர சிஎஸ்கே ரசிகன் என்று தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.

தமிழக செலிபிரிட்டி கிரிக்கெட் பிளேயரும், நடிகருமான  விஷ்ணு விஷால்.  என்ன ஒரு மேட்ச். என்று உள்ளப்பூர்வாக விமர்சித்துள்ள நிலையில், ஆட்டம்  ஒரு ரோலர் கோஸ்டர் போன்று இருந்தது. சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. மலிங்காவின் கடைசி ஓவர் சிறப்பாக இருந்தது. ஆனால் எங்கேயோ ஆட்டத்தை விட்டுவிட்டோம். வெல்டன் மும்பை இந்தியன்ஸ் என்று கூறி உள்ளார்.

நடிகர் தமன் தனது பதிவில்,  குட்லக் தோனி டீம்.. மும்பை இந்தியன்ஸ் நன்றாக விளையாடினார்கள். என்ன ஒரு கம்பேக் வெற்றி… பும்ராவின் பவுலிங் மும்பைக்கு இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது.

நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பதிவில், ஆவ்… என்ன ஒரு ஃபைனல். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு ஃபைனலும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது என்று தெரிவித்துள்ளவர்,  இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும்,  ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

சரத்குமாரின் மகளும், சமுக செயற்பாட்டாளருமான  வரலட்சுமி சரத்குமார், தனது பதிவில் ஒரு ரன்னில் தோல்வி என்பது  நமக்கு வெற்றிதான் என்று ஆறுதல் தெரிவித்துள்ளவர், ஏனெனில் நாம் ஒரு சூப்பர் டீம் என்பதை வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே நம்மிடம் அவர்கள் பல முறை பைனலுக்குவந்திருக்கிறார்கள்.  நம்ம டீம் மாஸ் வித் க்ளாஸ். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தோனி. நமக்கு அடுத்த வருடம் இருக்கிறது. சிஎஸ்கே ஃபார் லைஃப். நீங்க கலக்கிட்டீங்க.. என்று கூறி உள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தனது பதிவில்,  என்ன ஒரு மேட்ச்!!! வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே நன்றாக விளையாடி மும்பைக்கு டஃப் கொடுத்தனர். சிறந்த ஃபைனல்ஸை கொடுத்தமைக்கு இரண்டு டீமுக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ரூபா மஞ்சரி, நேற்றைய ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம்  சிங்கத்தின் சண்டை போல இருந்தது. இருப்பினும் சிஎஸ்கே வழக்கம்போல மீண்டு வரும். அடுத்த ஆண்டு கப் நம்முடையது. ஷேன் வாட்ஸனுக்கு பாரட்டுக்கள்.. வாழ்த்துக்கள் மும்பை இந்தியன்ஸ். எப்போதும் நம்ம தல தோனிதான் என்றும் ஆதரவு கரம் நீட்டி உள்ளார்.

இதுபோல திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் சிஎஸ்கே அணியின ருக்கும், தல தோனிக்கும் வாழ்த்துக்கள் மட்டுமல்லாது தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.