அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் ‘மாறா’, விஷாலுடன் ‘சக்ரா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
அதை தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஒப்பந்தந்தமாகியுள்ளார் .
‘கலியுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.
பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது.