சென்னை:

ர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணிகளை ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறது  ஜனநாயக  சீர்திருத்த  அமைப்பு  (ADR)  மற்றும்  அறப்போர்  இயக்கம்.

கலைக்கோட்டுதயம்

இது குறித்த இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

12 ஏப்ரல் 2017 அன்று நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அங்கமான அறப்போர் இயக்கம் சேர்ந்து 57 வேட்பாளர்களின் வேட்புமனு பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது (5 வேட்பாளர்களின் உறுதிமொழிகள் தெளிவாக இல்லாததால் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)

குற்ற பின்னணி விவரங்கள்

–    57 வேட்பாளர்களில் 7 பேர் தம் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

–    2 வேட்பாளர்கள் தம் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ளதாக உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

–    தேமுதிக கட்சியைச் சேர்ந்த P.மதிவாணன் தம் மீது இபிகோ 307 பிரிவு (கொலை செய்ய முயற்சி) வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

–    சுயேட்சை வேட்பாளரான. N.குணசேகர் தம் மீது இபிகோ 307 பிரிவு (கொலை செய்ய முயற்சி), இபிகோ பிரிவு 324 (ஆபத்தான முறையில் தாக்குதல்) மற்றும் இபிகோ பிரிவு 384 (பணம் கோரி மிரட்டல்)  ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளார்.

நிதிநிலை பின்னணி விவரங்கள்

–    போட்டியிடும் 57 பேரில் 9 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் அதிமுக(அம்மா), அதிமுக (புரட்சித் தலைவி அம்மா), நாம் தமிழர் கட்சி, காமராஜர் தேசிய காங்கிரஸ், மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் அடங்குவர்.

–    வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 96.84 இலட்சங்களாகும். சுயேட்சை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 43 இலட்சங்களாகும்.

–    வேட்பாளர்களில் அதிக சொத்துக்கள் உடைய முதல் மூவர்:

மதிவாணன்

1.    K.கலைக்கோட்டுதயம் – நாம் தமிழர் கட்சி – மொத்த சொத்துக்கள் ரூ.14.14.கோடிகள்

2. TTV தினகரன் – அதிமுக (அம்மா) – மொத்த சொத்துக்கள் ரூ.10.78.கோடிகள்

3.  E.மதுசூதனன் – அதிமுக (புரட்சி தலைவி அம்மா) – மொத்த சொத்துக்கள் ரூ.5.38 கோடிகள்

–    TTV தினகரன் ரூ.5.04 கோடிகள் கடன் பதிவு செய்துள்ளார். வேட்பாளர்களில் அதிக கடன் பதிவு செய்பவர் இவரே.

–    வேட்பாளர்களில் அதிகமான வருவாய் பதிவு செய்துள்ள மூவர்:

TTV தினகரன் – அதிமுக (அம்மா) – FY2015-16: ரூ.73 லட்சம் (மனைவி மற்றும் சார்ந்தவர் வருவாயைச் சேர்த்து). ஆனால் அவருடைய சொந்த வருவாய் ரூ.2.2 லட்சங்கள் மட்டுமே.

கங்கை அமரன் – பாஜக – FY2015-16: ரூ.17 இலட்சங்கள்.

மைக்கேல் ராஜ் M.A – சுயேட்சை – FY2015-16: ரூ. 14 இலட்சங்கள் (மனைவி           மற்றும் சார்ந்தவரைச் சேர்த்து). சொந்த வருவாய் ரூ.10 இலட்சங்கள்.

–    வேட்பாளர்களில் 70 சதவிகிதம் வருமான வரி விவரங்களை வெளியிடவில்லை. 28 சதவிகிதம் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) பதிவு செய்யவில்லை.

பிற பின்னணி விவரங்கள்

–    வேட்பாளர்களில் 37 பேர் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வித் தகுதி பதிவு செய்துள்ளனர். 20 வேட்பாளர்கள் பட்டதாரிகள் அல்லது முதுகலை படித்துள்ளவர்கள்.

–    37 வேட்பாளர்கள் வயது 25 முதல் 50 வரை என்று பதிவு செய்துள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன. 2௦ வேட்பாளர்கள் 51 முதல் 80 வயது வரை ஆனவர்கள்.

–    57 வேட்பாளர்களில் 6 பேர் பெண்கள் (10.5%). இவர்கள் அனைவரும் சுயேட்சையாக நிற்பவர்கள்.