டில்லி:

தண்ணீர் இல்லாத நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இடம்பெறும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

உலகளவில் தென் ஆப்ரிக்காவின் நகரமான கேப் டவுன் விரைவில் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. அங்குள்ள 70 சதவீத நிலத்தில் தண்ணீர், குறிப்பாக குடிநீர் இல்லாத நிலை உள்ளது. 3 சதவீதம் மட்டுமே சுத்தமாக உள்ளது.

இதனால் 100 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படவுள்ளது. சுமார் 200 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 2014ம் ஆண்டின் ஆய்வுப்படி உலகில் உள்ள 500 பெரு நகரங்களில் 4ல் ஒரு நகரத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டில் சுத்தமான தண்ணீரின் தேவை 40 சதவீதம் அதிகரிக்கும். பருவநிலை மாற்றம், மனிதர்களின் நடவடிக்கை, மக்கள் தொகை பெருக்கத்தால் இந்த நிலை ஏற்படவுள்ளது. கேப் டவுனை தொடர்ந்து உலகில் 11 நகரங்களுக்கு இதேபோன்ற நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரேசிலின் சா பவ்லோ, இந்தியாவின் பெங்களூரு, சீனா தலைநகர் பெய்ஜிங், எகிப்த் தலைநகர் கெய்ரோ, இந்தோனேசியா தலைநகர் ஜெகர்தா, ரஷ்யா தலைநகர் மாஸ்கவ், துருக்கி நாட்டின் இஸ்தான்புல், மெக்சிகோ நகரம், லண்டன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி ஆகிய 11 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.