சென்னை

சென்னை நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதால் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளன.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.  இதுவரை சென்னையில் 48,019 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 3108 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் 1945 பேரும் காஞ்சிபுரத்தில் 755 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை நகர் முழுவதும் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முழு ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது.  தற்போது கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சென்னை நகரில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலே உள்ள 4 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 900 டாஸ்மாக் மதுக்கடைகளில் 200மட்டுமே இயங்கி வருகின்றன.  எனவே சென்னை மதுப்பிரியர்கல் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர். தற்போது  இந்த கடைகளிலும் பாதிக்கு மேல் மூடப்பட உள்ளன.  எனவே சென்னை புதுப்பிரியர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.