சென்னை:
மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வகுப்பான கூபே வசதி பெட்டியல் பயணம் செய்த திமுக எம்எல்ஏவும், சட்டமன்ற திமுக கொறடாவுமான சக்கர பாணியிடம் இருந்து பணம் மற்றும் மோதிரம், செல்போன் திருடு போயுள்ளது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாதுகாப்பு மிகுந்த கூபே பெட்டிக்குள் புகுந்து, கொள்ளையடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரான சக்கரபாணி, திமுக கொறடாவுகம் இருந்து வருகிறார். இவர் கட்சி அலுவல் சம்பந்தமாக மதுரைக்குச் சென்றுவிட்டு , மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.
இவர் பயணம் செய்தது முதல்வகுப்பிலான கூபே எனப்படும் இரண்டு நபர்கள் பயணம் செய்யும் வசதி கொண்ட பெட்டியாகும். இரவு அசதியின் காரணமாக தூக்கிய சக்கரபாணி, அதிகாலை எழும்பூர் வந்ததும் ரயிலை விட்டு இறங்கி தனது உடமைகளை சோதனை செய்துள்ளார்.
அப்போது, தன்னிடம் இருந்த ரூ. 1 லட்சம், மற்றும் இரண்டு சவரன் மதிப்புள்ள மோதிரம், விலை உயர்ந்த செல்போன் பறிபோனதை கண்டு திடுக்கிட்டார். இதுதொடர்பாக உடனே எழும்பூர் ரயில்வே போலீஸில் எம்.எல்.ஏ சக்ரபாணி புகார் அளித்துள்ளார்.
புகாரைப்பெற்ற போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் எம்.எல்.ஏவிடமே மர்ம நபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
\கூபே வடிவிலான பெட்டியில் உள்புறம் தாழ்பால் போடும் வசதி உள்ள நிலையில், யார் உள்ளே திருடியிருப்பார்கள் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.