சென்னை: சென்னை பெரம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. இதில் கரிமுல்லா என்ற இளைஞர்மீது 11 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளின் பெண்கள்மீதான அத்துமீறல்களும் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகள் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் பொதுவான மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக மாறி வருகிறது.
உலகளவில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண் உடல் மற்றும்/அல்லது உடலுறவு நெருங்கிய கூட்டாளி வன்முறை, கூட்டாளி அல்லாத பாலியல் வன்முறை அல்லது இரண்டிற்கும், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது உட்படுத்தப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், சமுக வலைதளங்கள், இணைய தளங்கள், பள்ளி மாணவ மாணவிகளிடையே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாதது என கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் குறைந்தது 51,100 பெண்கள் பாலியல் மற்றும் மிருகத்தனமான வன்முறைக்கு உள்ளாட்டக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளதாகவும், இவர்கள், கொலை செய்யப்பட்ட பெண்களின் கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என்ற அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் தடையற்ற நடமாட்டம், 24மணி நேரமும் திறந்திருக்கும் மதுபான கடைகள், மாணவிகளின் கல்விக்கு என அரசு வழங்கும் பணத்தைக்கொண்டு ஆடம்பரமாக செயல்படுதல், பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை, மீறினால், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தைக்கொண்டு, ஆசிரியர்களை கேவலப்பத்தும் செயல் போன்றவை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் கல்வி கற்க வேண்டிய காலத்தில் பலர், அதை விடுத்து போதை, பாலியல் போன்ற விஷயங்களில் அதீக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
பாலியல் குற்றவாளிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அரசை விமர்சிக்கும் அரசியல்வாதிகளை தேடுவதிலும், இரவோடு இரவாக சென்று கைது செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், சென்னை பெரம்பூர் பகுதியில் பள்ளி மாணவிகள் 3 பேரை, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 இளைஞர்கள் காதலிப்பதாக கூறி, அழைத்துச்சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 24 ஆம் பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி தேதி மாயமான நிலையில், அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் தேடி வந்தனர். மாயமான மாணவியின் செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்திய போது, பெரம்பூரை வீனஸ் நகர் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீனஸ் நகரில் உள்ள ஒரு விட்டில் அவர்கள் இருப்பது தெரிய வந்த நிலையில், காவல்துறையினர் அதிரடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, அந்த வீட்டில் மாயமான சிறுமியுடன் மேலும் இரண்டு சிறுமிகளும், அவர்களின் காதலர்களும் இருந்தது தெரிய வந்ததை. இதை கண்ட காவல்துறையினர்அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர்களை கொத்தாக தூக்கிக்கொண்டு காவல்நிலையம் வந்தனர்.
விசாரணையில், மாயமான பெரம்பூர் பள்ளி மாணவி உடன் இருந்த மற்ற 2 பெரும் பள்ளி மாணவிகள் என்பது தெரிய வந்தது. இவர்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று, கடந்த இரு நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்து வந்த இளைஞர்கள் 3 பேர் கிரிமினல் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.
கைதான 3 பேரில் ஒருவரான கரிமுல்லா என்பவன் மீது 11 வழக்குகள் உள்ளது. மற்றொரு மைனர் வயது (16 வயது) சிறுவன் மீது 6 வழக்கு களும், அபிஷேக் என்பவன் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.
கைது செய்யப்பட்ட 3 கிரிமினல் இளைஞர்கள் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமிகள் மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்படுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அரசு பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்ததும் முறையாக வீடு செல்வது இல்லை என்று குற்றச்சாடுக்கள் கூறப்படும் நிலையில், தற்போது பெரம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கிரிமினல் குற்றவாளிகளுடன் சென்றுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.