மலப்புரம்:

கேரள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கிடையே, படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என வித்தியாசம் தெரியும் வகையில் சீரூடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் கல்விச்சாலையில் மாணவர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

கேரள மாநிலத்தில்,  மலப்புரம் அருகே உள்ளது பண்டிக்காடு என்ற ஊரில். இங்கு தனியாருக்கு சொந்தமான ஆங்கில நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில்,  நன்றாக படிக்கும் மாணவர்களையும் சரியாக படிக்காத மாணவர்களையும் வேறுபடுத்தி காட்டும் வகையில் இரு வேறு சீருடை அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு சீருடை சாம்பல் நிறத்திலும்,  மற்ற மாணவர்களுக்கு வழக்கமான சீருடையும் அணியும் வகையில் சீருடையில் வேறுபாடு காட்டியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இதுகுறித்து மாநில குழந்தைகள் வாரியத்திற்கு புகார் வந்ததை தொடர்ந்து,  அதிகாரிகள் பள்ளிக்கு சென்று,  மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போது, மாணவர்கள் பலர், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் தங்களுக்கிடையே வேறுபாடு களை காட்டுகிறது என்றும், தங்களுக்கு மன வருததம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துக்கு  இரு வேறு சீருடை முறையை கைவிட பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதனை பள்ளி ஏற்கவில்லை.

இதைத்தொடர்ந்து  மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனுக்கும், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளி முதல்வர் அப்துல் கூறுகையில்,

மாணவர்களின் பழக்க வழக்கங்கை தெரிந்துகொள்ள இரு வேறு உடை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த முறை கைவிடப்பட்டதாக கூறி உள்ளார்.

 

[youtube-feed feed=1]