சாண்டியாகோ,

சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ காரணமாக 11 பேர் பலியாகினர். தவிர 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சிலி நாட்டின் தெற்கு , மத்தியப் பகுதிகளில் உள்ள காடுகளில்,  திடீரென ஏற்பட்ட காட்டு தீயால் பல லட்ச ஏக்கர் அளவில் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளது.

பல நாட்களாக எரிந்து வரும் காட்டுதீயை அணைக்க சிலி அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அதைத்தொடர்ந்து பிற நாடுகளின் உதவியை கோரியுள்ளது சிலி.

பிரான்ஸ், அமெரிக்கா, பெரு ஆகிய நாடுகளிடம் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி கேட்டுள்ளது சிலி.

சில சமூக விரோதிகளாலேயே காடுகளுக்கு தீ வைக்கப்பட்டு காட்டுத்தீ  பரவியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலரை கைது செய்யதுள்ளது அரசு.

இந்த காட்டுத்தீயின் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாகவும் சிலி அரசு தெரிவித்து உள்ளது.