நெட்டிசன்:

நா சாத்தப்பன் அவர்களது முகநூல் பதிவு
·
அமெசான் காட்டுக்கும் சஹாரா பாலைவனத்துக்கும் 3000 மைல்கள் தொலைவு இருக்கும். ஆனால் இயற்கை இவ்விரண்டையும் எப்படி கோர்க்கிறது ?

வருடந்தோறும் 2.7 கோடி டன் மணல் சஹாரா பாலைவனத்தில் இருந்து காற்றில் பறந்து அமெசான் காட்டுக்கு வருகிறது. அந்த மணல்துகள்களில் இறந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் இருக்கும்.

அதில் உள்ள பாஸ்பரஸ் உரமாக செயல்பட்டு காட்டை வளப்படுத்துகிறது. வருடத்துக்கு 22,000 டன் பாஸ்பரஸ் இப்படி உரமாக அமெசான் காட்டில் இலவசமாக இயற்கையால் தரப்படுகிறது. அந்தப் பகுதியில் காடு வளர இது உதவுகிறது.

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்