இந்திய அணியின் இறுதிகட்டப் போராட்டத்தை புகழ்ந்த ஷோயிப் அக்தர்..!

Must read

ராவல்பிண்டி: தோனி – ஜடேஜா ஜோடியின் ஆட்டம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும், தோனி உண்மையிலேயே ஒரு மேதைதான் என்றும் கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணியின் முன்னணி துவக்க வீரர்கள் விரைவாகவே வீழ்ந்துவிட்டார்கள். பலர் சாதாரண பந்துகளுக்கு அவுட்டானார்கள். அதேசமயம், கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட் தேவையில்லாதது என்பது என் கருத்து.

ஆனால், பின்களத்தில் இறங்கிய தோனி – ஜடேஜா ஜோடியின் ஆட்டம் அற்புதமானதாக இருந்தது. அவர்கள் இறுதிவரைப் போராடினார்கள். ஜடேஜா சிக்ஸர் அடிக்க நினைத்தப் பந்தில் அவுட்டானார். தோனி களத்தில் இறுக்கும்வரை போட்டி இந்திய அணியின் பக்கம்தான் இருந்தது.

இப்படி ஒரு ஆட்டத்தை தங்களின் அணி ஆடியதற்காக இந்திய ரசிகர்கள் பெருமைப்படத்தான் வேண்டும். தோனி உண்மையிலேயே தான் ஒரு மேதை என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவரால் தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை” என்றார்.

More articles

Latest article