விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் ஷிவானி.ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் லைவ் வருவது என்று எப்போதும் இருந்து வந்தார் ஷிவானி.

https://www.instagram.com/p/CDVfFH9l3qe/

தற்போது சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு ஷிவானி தனது நடன வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]