டில்லி
பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கூட்டணியில் நடந்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சி பாஜக கூட்டணியில் இருந்த போதிலும் அவ்வப்போது ஆளும் கட்சியின் செயல் பாடுகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாஜகவை கடுமையாக விமர்சித்து வருவதால் அது அரசியல் நோக்கர்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசிலும் சிவசேனா பங்கு பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பேசிய சிவசேனா மக்களவை உறுப்பினர் ஆனந்தராவ் அட்சுல் பேசினார். அப்போது அவர் பாஜகவுடனான கூட்டணி குறித்து கடும் அதிருப்திய தெரிவித்தார். அட்சுல் தனது உரையில், “பாஜகவுடன் எங்கள் கட்சியான சிவசேனா வெகுநாட்களாக கூட்டணியில் உள்ளது.
ஆனால் மத்திய பாஜக அரசு எடுக்கும் பல நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. ஆகவே தற்போது அவை குறித்து ஆராயும் நேரம் வந்துள்ளது. முந்தைய வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் தலைமையின் கீழ் பாஜக இருந்த போது சிவசேனாவின் அப்போதைய தலைவர் பால் தாக்கரே உடன் நல்ல உறவில் இருந்தது. ஆனால் தற்போதைய பாஜக எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள், சிறு வியாபாரிகள், த்ழிலளர்கள் என அனைத்து மக்களும் மிகவும் துயருறுகின்றனர். அவர்களால் அன்றாடா தேவைகளுக்கான பணத்தையும் சம்பாதிக்க முடியாத நிலையில் அரசு அவர்கலி வைத்துள்ளது. இப்படி இருக்க நாங்கள் அந்த கூட்டணியில் தொடருவது சங்கடத்துக்குரியதாக உள்ளது.
ஆகவே நாங்கள் இப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் நாளை யாருடன் என்பதை இப்போது சொல்ல முடியவிலை. அதே நேரத்தில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணியை தொடர விரும்புகிறது “ என தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு சொன்னது பாஜக – சிவசேனா கூட்டணி முறியலாம் என்பதன் எடுத்துக்காட்டாக தோன்றுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.