பிரபல நடிகரை வறுத்தெடுத்த சிவசேனா..

பிரபல இந்தி நடிகர் சோனு சூட், மகாராஷ்டிர ஆளும் கட்சியான சிவசேனாவின் வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.ஒருவர், மும்பையில் சிக்கி உள்ள தங்கள்  மாநில தொழிலாளர்களைச் சொந்த ஊர் அனுப்பி வைக்க உதவுமாறு சோனுவை டிவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனை ஏற்று சோனு தனது செலவில் சில பேருந்துகளை ஏற்பாடு செய்து மத்தியப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மும்பையில் தவித்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தார்.

அதனைக் கிண்டல் அடித்துள்ள சிவசேனா’’ சோனு திடீர் என ‘மகாத்மா’’ ஆக உருவெடுத்து விட்டார்’’ என தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சி பத்திரிகையில் சோனுவை விமர்சித்துக் கட்டுரை எழுதியுள்ள அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்’’ குறுகிய காலத்தில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது ‘’ என்று கேலி செய்துள்ளார்.

‘’ ஒருநாள் பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’’ நிகழ்ச்சியில் சோனு சூட் பெயர் உச்சரிக்கப்படும். டெல்லி சென்று அவர் மோடியைச் சந்திப்பார். பின்னர் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. ‘ஸ்டார்’’ பேச்சாளராக சோனு அறிவிக்கப்படுவார்’’ என சிவசேனாவின் சஞ்சய் ,குறிப்பிட்டுள்ளார்.