மாஸ்கோ

லகின் மிகப் பெரிய பெட்ரோல் நிறுவனமான ஷெல் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.  மேலும் இனி டாலரைக் கொண்டு ரஷ்ய நிறுவனங்கள் வர்த்தகம் செய்யவும் த்டை விதிக்கபட்டுள்ளது.  இதனால் ரஷ்யாவின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   ரஷ்யாவில் உலக அளவில் முக்கியமான பெட்ரோல் நிறுவனங்கள் வர்த்தகக் கூட்டு வைத்துள்ளன.

இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற பெட்ரோல் நிறுவனமான பிபி நிறுவனம் ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனமான ரோச்னெஃப் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது.  ரோச்னெஃப் நிறுவனத்தின் 20% பங்குகளை இந்நிறுவனம் வைத்துள்ளது. அவற்றை விற்கப்போவதாக பிபி நிறுவனம் அறிவித்துள்ளது

இந்நிலையில் ரஷ்யாவுக்கு மேலும் வர்த்தக நெருக்கடி உண்டாக்கும் வகையில் உலக அளவில் பெரிய நிறுவனமான ஷெல் பெட்ரோல் நிறுவனம் தனது ரஷ்யக் கூட்டாளி நிறுவனமான தாஸ்போரமுடன் உள்ள வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.   ஷெல் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்துடன் வைத்துள்ள 27.5% பங்குகளை கை விடுவதாக தெரிவித்துள்ளது.

தவிர ஷெல் நிறுவனம் ரஷ்யா மற்றும் ஜெர்மனியை இணைக்கு கார்ட் ஸ்டிரீம் எரிவாய்க் குழாய் திட்டத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது.  ஏற்கனவே பி பி நிறுவனம் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஷெல் நிறுவனமும் அதே முடிவை எடுத்துள்ளது ரஷ்யாவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.