கோவை:
கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன்  கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார்.

மாணவன் ஹரிஷ்
மாணவன் ஹரிஷ்

கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்.  தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.  நேற்று பள்ளியில் நடைபெற்ற  சுதந்திர தின விழாவில் பங்கேற்றபின் நண்பர்களுடன் பைக்கில் ஜாலியாக   சுற்றி விட்டு மதியம் ஜி.வி ரெசிடென்சி  அருகே வந்துள்ளனர். அங்குள்ள பாழடைந்த  கிணற்றை பார்த்ததும், நண்பர்கள் அனைவரும் அதன் முன் நின்று ஷெல்பி எடுத்துள்ளனர். அந்த கிணறு சுமார் 120 ஆழம் உடையது. உள்ளே குறிப்பிட்ட ஆழம் வரை கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டு உள்ளது. கிணற்றுக்குள் 70 அடிக்கு கீழ் தண்ணீர் உள்ளது. ஏற்கனவே கிணற்றுக்குள் தேவையற்ற பொருட்கள் அதிக அளவில் போடப்பட்டு தண்ணீரும் அசுத்தமாகி இருந்தது.
மாணவன் விழுந்த கிணறு
இதை பார்த்த மாணவர்கள் கிணற்றுக்குள் இறங்கி  செல்போனில் ‘ஷெல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.  ஹரீஷ் கிணற்றின் படிக்கட்டில் சில அடி தூரம் இறங்கி நின்று போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது, கால் தவறி உள்ளே விழுந்தார்.
தண்ணீரில் தத்தளித்த அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். தன் கண் முன்னே நண்பன் தண்ணீரில்  உயிருக்கு போராடுவதை எண்ணி நண்பர்கள் வேதனையுற்றனர். சிறிது நேரத்தில் மாணவன் ஹரிஷ் தண்ணீருக்குள் மூழ்கினான்.
இது தொடர்பாக பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் தேடியும் ஹரீசின் சடலத்தை மீட்க இயலவில்லை. மேலும் கிணற்றுக்குள் உள்ள கட்டைகள் போன்றவற்றை வெளியே எடுத்து வருகிறார்கள்.