கடலூர்: நல்ல பண்பு, நல்ல நடத்தையை பற்றி குஷ்பு பேச கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 3 நாள் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் மக்களோடு மக்களாக எளிமையாக பழங்கியது பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், மீனவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணாக்கர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினார். குமரி மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது, பள்ளி மாணவி ஒருவரின் சேலஞ்சை ஏற்று, புஸ்அப் எடுத்து அசத்தினார். இது நல்ல வரவேற்பை பெற்றதுடன், காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையிலும் அமைந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ராகுலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். ”ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதைத்தான் சொல்ல வேண்டும். மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வதோ ஒரு தலைவருக்கான அம்சமே இல்லை என்று சாடியிருந்தார். இது காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, நல்ல தலைமை, நல்ல பண்பு, நல்ல நடத்தை, நல்ல செய்கையை போன்றவை பற்றி குஷ்பு பேசவே கூடாது என அதிரடியாக பதில் அளித்தார்.
மேலும், “திமுகவுடன் கூட்டணி தொகுதி பேச்சுவார்ததை 2 முறை நல்லமுறையில் நடந்துள்ளது. நாளை மீண்டும் பேச்சுவார்ததை நடக்க இருக்கின்றது. மிழகத்தில், காங்கிரஸ்-திமுக 25 ஆண்டுகால கூட்டணி தொடந்து வருகின்றது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சாரக வர வேண்டும் என்ற அடைப்படையில் இந்த கூட்டணி தற்போது அமைந்துள்ளது. தற்போது, பந்து அவர்கள் கையில் உள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது என்பதும் அவர்கள் கையில்தான் உள்ளது, பாஜகவிடம் இருந்து இந்தியாவை மட்டுமல்ல, எதிர் கட்சியினையும் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைந்த கூட்டனி இது என்றார்.
மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட வில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.