நெட்டிசன்:
கோவிந்தராஜன் சீனிவாசன் ( Govindaraj Srinivasan) அவர்கள், “நீலச்சாயம் வெளுத்துப் போச்சு… “ராஜா” வேஷம் கலைஞ்சு போச்சு…” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, இரண்டு வார்த்தைகளைக்கூட, எழுதிக் கொடுத்திருப்பதை பார்க்காமல் பேசத்தெரிவதில்லை. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்” என்ற திரைப் பாடலைக் கூட பார்த்துத்தான் படித்தார்.
அப்படி பார்த்துப் படிக்கும்போதேகூட ஏக குளறுபடி.
“தங்கத்தாரகை ஜெயலலிதாவுக்கு மாவட்டம் தோறும் ஆறு அடியில் சிலை அமைக்கப்படும்” என்று எழுதிக்கொடுக்கப்பட்டதை, “ஜெயலலிதாவுக்கு மாவட்டம்தோறும் ஆறு அடி உயரத்தில் தங்கச் சிலை அமைக்கப்படும்” என்று படித்தார்.
தானாகப் பேசினாலோ கேட்கவே வேண்டாம்.
“இந்தியா டுடே” இதழின் நிகழ்ச்சியில், “தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த இதழ் மென்மேலும் வளவரவேண்டும்” என்றார். இந்த இதழின் தமிழ்ப்பதிப்பு நின்று வருடக்கணக்காகிறது.
ஆனால் நேற்று நியூஸ் 18 சேனலில் ஒளிபரப்பான, சசிகலாவின் பேட்டி.. பார்த்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சற்று இடைவெளிவிட்டுவிட்டு பதில் சொன்னாலும் தடுமாறாமல் பதில் அளித்தார்.
எப்படி நடந்தது இந்த அதியம்?
;சிம்பிள்.
சசிகலாவின் பேட்டி முழுவதும் குறிப்பிட்ட ஒரு ஆங்கிளில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது சசிகலாவின் பக்கவாட்டு பக்கம் மட்டுமே நேயர்களுக்கு தெரியும். அடுத்த பக்கம்.. அதாவது அடுத்த காது தெரியாது.
நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கான பதிலை வெளியில் இருந்து ஒருவர் சொல்ல, தனது “அந்தப் பக்க” காதில் உள்ள மைக்கில் அதனை கேட்டு, வார்த்தைக்கு வார்த்தை கிளிப்பிள்ளையாக ஒப்புவிக்கிறார் சசிகலா. பேட்டியை சற்று கவனித்து பார்த்தாலே இந்த ‘டிராமா’ தெரியும்.
குறிப்பாக சசிகலா உச்சரிக்கும் மாடுலேஷன், வார்த்தைகள், இடைவெளி விட்டு பேசும் முறை.. இதெல்லாம் சசிகலாவுக்கு மிக வேண்டிய ஒருவருக்கு சொந்தமானது என்பது அவரோடு பழகியவர்களுக்குத் தெரியும். அவர் சொல்லச் சொல்ல இவர் பதிலை வார்த்தை வார்த்தையாக உதிரி, உதிரியாக சொல்கிறார்.
இந்த ‘டிரிக்’ ஒரு சினிமாவில் வந்துள்ளது. நடிகர் நாசருக்கு பதிலாக அவரது மனைவி ஊர்வசி முதல்வராக பொறுப்பேற்று இருப்பார். இயர் மைக்கில் நாசர் சொல்லச் சொல்ல, அதைக் காதில் கேட்டு முதல்வர் ஊர்வசி பதில் அளிப்பார். அதனை ஆளுநராக இருப்பவர் கண்டுபிடித்து விடுவார். அதே போன்ற காட்சிதான் இது.
சசிகலா என்கிற பிம்பத்தை கட்டமைக்க என்ன பாடு படுகிறார்கள்!