காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு போட்டி ஏற்படும் சூழல் உருவானதால் தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
காலை வாக்குப்பதிவு துவங்கியதும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம் முதல் நபராக வாக்களித்தார்.
அவரைத் தொடர்ந்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வாக்களித்தார்.
"Some people play safe in order not to lose. But if you just play safe, you will definitely lose." #ThinkTomorrowThinkTharoor
— Shashi Tharoor (@ShashiTharoor) October 17, 2022
மல்லிகார்ஜுன கார்கே, சஷி தரூர் இருவரில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்க நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடும் சஷி தரூர் தேர்தல் குறித்து இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :
“சிலர் நாம் தோற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக செயல்படுகின்றனர். அந்த உணர்வே அவர்களுக்கு தோல்வியை தரும்” என்று பதிவிட்டுள்ளார்.