டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில்  தங்களது வாக்குகளை செலுத்தினார்.

ஏட்றகனவெ தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி  மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என அறிவித்திருந்த நிலையில், அவர்கள்  டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

22ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைவர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அனைவரும் இன்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு தேவையான வாக்குச்சீட்டுக்கள், வாக்குபெட்டிகள் கடந்த வாரம் மாநிலங்களுக்க அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை  10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்களித்தனர்.