
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்-ன் அடுத்த திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமிழில் கணம் என பெயரிடப்பட்டுள்ளது தெலுங்கில் ஓகே ஒக ஜீவிதம் என வெளியாகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இன்று இத்திரைப்படத்தின் தமிழ் டைட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
[youtube-feed feed=1]தமிழில் மறு #கணம் காணும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்!! @ImSharwanand @amalaakkineni1 @twittshrees #Kanam pic.twitter.com/0UhF7NJD5l
— SR Prabu (@prabhu_sr) September 24, 2021