ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தின் இந்தி ரீமேக்கை அட்லீ இயக்கவுள்ளதாகவும், அதில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .
இந்நிலையில்,ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டி பார்ப்பதற்காக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்னை வந்தார்.
அப்போட்டியின் போது ஷாருக்கானும் அட்லீயும் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி இருவரும் இணைந்து படம் பண்ணும் தகவல் உறுதியாக்கியுள்ளது