17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்! கூகுள் டூடுளை வெளியிட்டு விழிப்புணர்வு

Must read

17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நடைபெறும் நிலையில், கூகுள் டூடுளை வெளியிட்டு வாக்களிப்பது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

இன்று வாக்குப்பதிவு  தொடங்குவதையொட்டி   ஒரு விரல் புரட்சியாக டூடுளை கூகுள்  வடிவமைத்து உள்ளது.

நாட்டின் முக்கிய தினங்களை கூகுள் டூடுளாக வெளியிட்டு கவுரவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒருவிலல் புரட்சியாக டூடுள் வெளியிட்டு உள்ளது.

GOOGLEஎன்ற வார்த்தையில்  ஒரு விரலில் மை உள்ளது போன்ற வாக்களிக்கும் முறையை விளக்கி டூடுள் அமைத்துள்ளது.  வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளது

More articles

Latest article