ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்-யை வேலையிலிருந்து தூக்கியதைப் போலவே தற்போது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி வகித்துவரும் மார்க் ஜுக்கர்பெர்க்கினை நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலிருந்து அகற்றக்கோரி திட்டஅறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மார்க் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர், அதன் இயக்குனர்கள் குழுவில் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார்.
ஃபேஸ்புக்கில் முதலீடு செய்துள்ள சம்ஆஃப்அஸ் எனும் கண்காணிப்புக் குழு நிறுவனத்தின் உறுப்பினர்கள், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நீக்கப்படவேண்டுமென என மனுதாக்கல் செய்திருந்தனர். வென்சுராபீட் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 3,33,000 நபர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாகவும், அதில் வெறும் 1500 பேர் மட்டும்தான் உண்மையான பங்குதாரர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
சம்ஆஃப்அஸ் எனும் கண்காணிப்புக் குழு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் “ ” வளர்ந்துவரும் பெருங்கம்பனிகளின் அதிகாரத்தைக் கட்டுக்குள் வைப்பது” ஆகும். அது சமர்ப்பித்துள்ள திட்டஅறிக்கையில், “ கார்ப்பரேட் ஆளுகையை மேம்படுத்த, நிறுவனத்தின் நிர்வாகிகளை மேற்பார்வை செய்ய, மற்றும் கூடுதலாக பொறுப்பு, பங்குதாரர் சார்புடையக் கொள்கைகளை வகுக்கக்கூடிய ஒரு சுதந்திரமான நபரையே தலைவராக நியமிக்கப்பட வேண்டும்” என்று முன்மொழியப்பட்டுள்ளது.
மார்க் ஃபேஸ்புக்கின் அதிகளவிலான பங்குகளின் உரிமையாளராய் உள்ளதால் சம் ஆஃப் அஸ் வைத்துள்ள முன்மொழிவு அறிக்கை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என நம்ப்ப்படுகின்றது.
நிறுவன பங்குதாரர் சேவைகள் (ISS) அமைப்பு, கார்ப்பரேட் நிர்வாகச் சீர்கேடுகுறித்த மதிப்பீட்ட்டினை வளியிடும். அடன் மதிப்பீட்டின் படி பேஸ்புக் கூட்டக மதிப்பெண் 10 (அதாவது மிக மிக உயர்ந்த நிலை ஆபத்து) ஆகும்.
எனவே இது சில முதலீட்டாளர்களை ஃபேஸ்புக் பங்குகளை வாங்குவி அச்சமூட்டும் என நம்ப்ப்படுகின்றது.
மார்க் இதனைக் கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வாரா? என்பதே முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.