ராய்காட்

ரத்பவார் முன்னிலையில் அவரது கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது.

சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், இதையொட்டி தனக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் தங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவிக்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கில் அஜித் பவாருக்கு ஆதரவாக முடிவு அமைந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார்’ என்ற பெயரும், ‘துர்ஹாவை ஊதும் மனிதன்’ (Man Blowing Turha) என்ற சின்னமும் வழங்கப்பட்டது. ‘துர்ஹா’ என்பது பாரம்பரிய இசைக்கருவியாகும்.

நேற்று தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. ராய்காட்டில் கட்சித்தலைவர் சரத்பவார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.