சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிவாகை சூடி வருகிறது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிங்ககிறது. தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வெளியிட்டுள்ள் வாழ்த்து செய்தியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உண்மையிலேயே தகுதியான வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.