
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தவாறு ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு.
இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்துக்குத் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாந்தனு – கீர்த்தி தம்பதியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் .

“It’s Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பாவின் லெட்டர்பேடில் வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய விஐபிக்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள் மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.

பாக்யராஜ் புள்ள நடிக்கிறேன் என்பதைவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிடுறதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்தும் என்று தோணுச்சு. முதல் முயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கரோனா நிறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).
We are filled with gratitude for the unconditional love&support you have given us for #KoCoNaKa on our YouTube channel #WithLoveShanthnuKiki 💛
Feeling extremely grateful😍
Thank you makkaley 🙏🏻
– அன்றும் இன்றும் என்றும்😊#KonjamCoronaNaraiyyaKadhal 👇https://t.co/ibb9zCd0oB pic.twitter.com/dayQSj8oNQ— Shanthnu (@imKBRshanthnu) May 21, 2020
ஆனா அது உங்க பேராதரவினால் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.