கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அவர் மனைவி சேர்ந்து ‘கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்’ எனும் குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 7:28 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது முழுக்க முழுக்க வீட்டில் ஐபோனிலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலருக்கும், ஒளிப்பதிவாளர் இடத்தில் யுவஸ்ரீ என்ற பெண்ணின் பெயர் இருந்ததால் யார் எனும் கேள்வி எழுந்தது .


இது குறித்து சாந்தனு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் :-
“யார் அந்த கேமரா பெண்மணி என்று வியக்கும் அனைவருக்கும்… அவர்தான் யுவஸ்ரீ. எங்கள் வீட்டில் இருக்கும் பணிப்பெண். எல்லா இடத்திலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவருக்கு லைக்குகளை வழங்கி, அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம்” என பதிவிட்டுள்ளார் .