ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கியதன் மூலம் கிராமப்புற ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் – கார்த்திக் சுப்புராஜ்.

தனுஷை வைத்து படம் டைரக்டு செய்த அவர், இப்போது விக்ரம் நடிக்கும் 60 வது படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடினார். விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர், பெரிய விருந்து கொடுத்து சுப்புராஜை அசத்தி விட்டனர்.

எதிர்பாராத விதமாக டைரக்டர் ஷங்கரும் நேரில் வந்து கார்த்திக் சுப்புராஜை வாழ்த்தினார்.

இது தொடர்பான போட்டோக்களை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு, ஷங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி