ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், கடந்த வருடம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

தேசிய விருதுக்கு 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம், சிறப்பு தேசிய விருது (jury award) மற்றும் சிறந்த ஒலிப்பதிவு (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருதுகளை வென்றது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லது.

’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.