சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தின் சட்ட ஒழுங்க கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு புதிய டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்ப்டடு உள்ளார்.

கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர்கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

காவல் தலைமையக ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் பயிற்சி பள்ளி மற்றும் அகாதமியின் டிஜிபி பதவியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாண்டோ படை, ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் உள்பட 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.