நெல்லை: இளம் பெண்ணின் பாலியல் புகாரில் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில்  இரண்டு  பாதிரியார்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை காவல்துறை யினர்  தேடி வருகின்றனர் .

திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அடுத்த கலந்தப்பனை சீயோன் புரத்தைச் சேர்ந்தபாதிரியார் டேவிட் ராஜ்.  இவரின் மகன் அனீஸ் பவுல் (வயது 25).  இவரும் பாதிரியாருக்கு படித்துள்ளார். இவர்கள் இருவரும், தங்களது கிறிஸ்தவ சபைக்க வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 22வயது இளம்பெண்ணை காதலிப்பதாக இளம் பாதிரியாரான அனீஸ் பவுல் நாடகமாடி,   திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அந்த பெண்ணுடன்  நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். நாளடைவில்,  ஆசை வார்த்தைகள் சொல்லி மயக்கி அந்த இளம்பெண்ணிடம் பாலியல் உறவு வைத்திருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்,   தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி  வலியுறுத்தி உள்ளார்.

அப்போதுதான் பாதிரியாரின் உண்மை முகம் தெரிய வந்தது.   திருமணம் செய்ய மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தொடர்ந்து வலியுறுத்தவே,   தான் பாதிரியார் என்பதால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இதுதொடர்பாக அந்த இளம்பெண், இளம் பாதிரியார் தந்தை பாதிரியார் டேவிட் ராஜிடம் முறையிட்டபோது அவர் அந்தப்பெண்ணை கேவலமாக திட்டியுள்ளதுடன், கொலை செய்து விடுவதாக  மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து, இளம்பெண் தரப்பில்,  வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாதிரியார், அனிஸ் பவுல் அவரது சகோதரர் பிரின்ஸ் உட்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். பாதிரியார்களை தேடி காவல்துறையினர் சென்றபோது, தந்தையும், மகனும் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. இளம்பெண்யை பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டல் விடுத்த இரு பாதிரியார்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில்,  அந்த இளம் பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி காதலித்து பின் ஏமாற்றிய ஆடியோ மற்றும் பிரின்ஸ் என்பவர் செல்போனில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆடியோ அனைத்தும் வைரலாக பரவி வருகிறது. இதனடிப்படையிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.