திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  புகாரின்பேரில்  அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பகுதியில் உள்ள  தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கல்லூரி மாணவியை மது  குடிக்க அழைத்த சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டையில்  செயல்பட்டு வரும் பழமையான பள்ளியான  தூய யோவான் பள்ளி  (செயின்ட் ஜோசப்) ஆசிரியர்கள் 2 பேர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதுபோல  நெல்லை அருகே ஒரு கிராமத்தில் உள்ள  தனியார் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹென்றி செல்வன் என்பவர்,  மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்ட்டார்.,

இந்த நிலையில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாலை ஷிப்டில் படிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்த மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் போனுக்கு இரவில் ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்புவது, பாலியல் தொடர்பான மேசேஜ்கள் அனுப்புவது  போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுகுறித்து  அந்த மாணவி தனது பெற்றோருடன் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் உறுதியான நிலையில்,  தற்காலிக பேராசிரியர் பிரைட் ஜோவட்ஸ்  என்பவரை போவீலசார் கைது செய்தனர்.

மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!

பள்ளிகளில் தொடரும் பாலியல் சேட்டைகள்: பாளை. தூய யோவான் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?

நெல்லை அருகே மேலும் ஒரு பள்ளியில் பாலியல் சம்பவம்: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு உடனடி ஜாமின்! தூத்துக்குடி நீதிமன்றம் தாராளம்….