கடலூர்:
பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், 16 பேரும் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடலூர் அருகே திட்டக்குடியில் 2 பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 8 பெண், 8 ஆண் என 16 பேர் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
இதனிடையே வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் மாயமான நிலையில் அவர்களை வடலூரில் மீட்கப்பட்டனர். விசாரணை யில், அவர்களை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாக கூறப்பட்டது.
திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாணவிகளை கடத்தில், மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், பின்னர் அந்த மாணவிகளை லெட்சுமி, கலா, ஜெமீனா, சதீஷ்குமார் உள்பட பாலியல் நபர்களிடம் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய அதிரடி விசாரணை காரணமாக இந்த கொடூர முயற்சியில் ஈடுபட்டு வந்த 8 ஆண் மற்றும் 8 பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 16 பேரும் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு கூறி உள்ளது. தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கூறி உள்ளது.
இதனிடையே வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]