சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக திமுக அரசை  குற்றம் சாட்டி உள்ள தவெக தலைவர் நடிகர் விஜய், இன்று மதியம்   தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியலாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செயியப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பான அன்று திடீர் கடிதம் எழுதியுள்ள தவெக தலைவரும் நடிகருமான விஜய்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை  என்றும்,  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாகவும், . சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களை கண்டு வேதனை அடைந்துள்ளதாவும், பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என கூறி உள்ளார்.

திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், விஜய்  திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், இன்று  பிற்பகல் ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவு ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் சற்றுமுன் முக்கியமான தகவல் ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை! அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து 6நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் கடிதம்…