பெண் உதவி இயக்குனருக்கு பாலியல் தொல்லை: திரைப்பட இயக்குனர் கைது

ன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்தி திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அநீதிகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு திரைப்படங்களில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவரும் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் இந்திப்பட இயக்குநர் ஒருவர்.

சுமார் 34வயதுடைய இவரிடம் இளம்பெண் ஒருவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில், புதிய படம்  குறித்து விவாதிக்க இருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் பெண் இயக்குனரை  மும்பையில் உள்ள மாஹிம் ரயில்வே நிலையம் அருகே வர சொல்லி இருக்கிறார்.

இதை நம்பி  பெண் இயக்குனரும், மாஹிம் வந்தார். அவரை  ஒரு காரில் ஏற்றி அழைத்துச்சென்ற இயக்குனர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று,  பெண் உதவி இயக்குனரின் ஆடைகளை பலவந்தமாகக் கழற்ற முயற்சி செய்துள்ளார்.

அப்போது, தனது  ஆசைக்கு இணங்க வில்லை என்றால் சினிமாவில் யாரிடமும் நீ பணியாற்ற முடியாது’ என்று மிரட்டி உள்ளார்.

இயக்குனரின் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் உதவி இயக்குனரிடம், தான் உன்னை காதலிக்கிறேன் என்றும் இறங்கி வந்துள்ளார்.

ஆனால், அவருக்கு உடன்மறுத்த பெண் இயக்குனர்,  இந்த சம்பவம் பற்றி அந்த இயக்குனரின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பெண் இயக்குனரை மிரட்டிய இயக்குனர்,  ‘இங்கு நடந்தது பற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அங்கிருந்து தப்பி வந்த பெண் இயக்குனர், அருகே உள்ள  மாஹிம் போலீசில் புகார் செய்தார். அதையடுத்து, போலீசார் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.

இந்த செய்தி பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


English Summary
Sexual Harrasment in Female Assistant Director: Film Director arrested