நாகர்கோவில்: சர்ச்சுக்கு வந்த  பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட புகாரில்,  தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம்  அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த  எண்பதுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பெண்ககளுடன் ஆபாசமாக இருந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி கிறிஸ்தவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ  மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் தேடினர். அதற்குள் அவர் தலைமறைவான நிலையில்,  இரண்டு தனிப்படைகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்மாவட்டங்களில்,  பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இந்த ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், ஆடியோக்கள், whatsapp சாட்டிங் பதிவுகள் பரவி வருகின்றன  பாதிரியார் பெனடிக் ஆன்றோ சர்ச்சுக்கு வந்த  பெண்களுடன் இருக்கும் ஆபாசமான வீடியோக்கள், புகைப்படங்கள், வலைத்தளங்களில் பரவி வருகின்றன.  . சர்ச்சுக்கு வரும்  பெண்களுடன் பாதிரியார் இப்படி ஆபாச லீலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது .

இதுதொடர்பாக நர்ஸ் ஒருவர் பாதிரியார் மீது  கொடுத்த புகாரின் பேரில்  இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் அருகே நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் அவர் தலைமறைவாக இருந்த பெனடிக்கை  போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பாதிரியார் பெனடிக் ஆன்றோ, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. தற்போது,  29 வயதான இந்த வாலிபர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்துள்ளார்.  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தக்கலை அடுத்த பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார். இவர் சர்ச்க்கு வரும் பெண்களிடம்,  இவர் ஆசை வார்த்தை கூறி, மயக்கி ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை தனது வலையில் சிக்க வைத்து வாழ்க்கை எஞ்சாய் செய்து வந்துள்ளார். இதில் சுமார் 80 பெண்களுடன் அவர் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் சிகிக்கி உள்ளது.   பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள். வீடியோக்கள்,  இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களும் ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் ஷாட் காட்சிகளும் சிக்கி உள்ளன.

இதுமட்டுமின்றி,  சென்னையில் திருமண வீட்டிற்கு பிரார்த்தனை செய்யச் சென்ற இடத்தில் ஒரே நாளில் அங்கு ஒரு இளம் பெண்ணை பாதிரியார் தன் வலையில் வீழ்த்தி இருக்கிறார். தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு பாதிரியார் திருமணம் செய்து வைத்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. போலீசாரிடம் பாதிரியாரின் லேப்டாப் சிக்கி இருக்கிறது.  அதை ஆய்வு செய்தபோது 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் போட்டோக்கள் இருந்திருக்கின்றன.

பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் இதன் மூலம் நினைக்கின்றனர்.   பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க லாம் என்று போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகார் அளிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.  ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

பாதிரியாரிடம் சிக்கிய பல பெண்கள், என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்  அவர்களில் பலர் திருமணமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்களாம்.