டில்லி :
ந்திய ஹாக்கி அணியின் கேப்டன் தன்னை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஒருவர்,  இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார்.
2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்தார்  சிங் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பிறகு டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மாடியில் இருந்து தன்னை தள்ளி விட முயன்றதாகவும்  அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

சர்தார் சிங்
சர்தார் சிங்

இது தொடர்பாக பஞ்சாப் போலீசில் புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து  சர்தார் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறு டில்லி மகளிர் கமிஷனர், பஞ்சாப் போலீசுக்கு பரிந்துரை செய்துள்ளது.