‘தியானம்' சொல்லித்தருவதாக கூறி இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை! கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது

Must read

போரூர்: சென்னையில், இளம்பெண்ணுக்கு தியானம் கற்றுத்தருவதாக கூறி, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சந்திரமவுலி ( வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார். அவரது கோவிலுக்கு அடிக்கடி வரும் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அர்ச்சகரிடம் தியானம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அர்ச்சகருர், அந்த பெண்ணிடம் காரணத்தை வினவியுள்ளார். அப்போது, இளம்பெண் தான் ஒரு பையனை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது அவர் பிரிந்து சென்றுவிட்டதால், அவர்மீதான காதலை மறக்க தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய சந்திரமவுலி,  தனக்கு தியானம் தெரியும், பேஷா நானே கற்றுத்தர்ரேனே என கூறி, அந்த இளம்பெண்ணுக்கு தனி அறையில் வைத்து தியானம் கற்றுக்கொடுப்பதாக கூறி, அவரை கண்ணை மூடச்செய்து, பாலியல் சில்மிஷத்தல் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அர்ச்சகர் மீது பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதுடன்,  அர்ச்சகர் சந்திரமவுலியை கொத்தாக தூக்கிச்சென்றனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

More articles

Latest article