புதுக்கோட்டை,

லைமையாசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை குறித்த வழக்கில், தலைமையாசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு மேற்கு சண்முகா நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் என்பவர்  ஆலங்குடி அருகேயுள்ள தெற்கு ராயப்பட்டி ஆரம்ப அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தன்னுடன் வேலை செய்த பள்ளி ஆசிரியை புவனேசுவரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை போனில் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று புவனேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த போது மதிவாணன் போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மனமுடைந்த புவனேஸ்வரி  மண்ணெண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து புவனேஸ்வரியின் கணவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் மீது புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, தற்கொலைக்கு தூண்டிய குற்றச் செயலுக்காக மதிவாணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், மேலும், பாலியல் தொல்லை கொடுத்த  குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனை கட்டத் தவறினால், மேலும், 3 மாத சிறை தண்டையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தார்.

தலைமையாசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதை அந்த பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.