சென்னை: சென்னை கிண்டி தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த (SFI) மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர்.
அங்கு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்முறையை கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரும் மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னை தரமணியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் உள்ளது. இங்குள்ள மாணவிகள் சிலர் நிர்வாகத்துக்கு எதிராக நடந்துகொண்டதால், அவர்கள்மீது நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் .
முன்னதாக, தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் மாணவிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்கள் பகிரப்பட்ட நிலையில் ….இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இது தவறான தகவல் எனவும் ..சிறுமி ஒருவர் விடுதியை விட்டு வெளியே சென்றிருந்த போது ..அவர் காதலனுடன் சென்றதாகவும் இது குறித்து அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்ததாகவும் ..பிறகு மனைவியை எச்சரிக்கை செய்து ஒரு வார விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இதுதொடர்பாக சில மாணவிகள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராடி வருகின்றனர். காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் கூட்டு பாலியலை மறைக்க முயல்கின்றனர் என்று போராட்டத்தில் எட்டுப்பட்டுள்ளனர் .
அவர்களுக்கு ஆதரவாக SFI எனப்படும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் மாணவிகள் விடுதிக்குள் நுழைந்தனர். இதை தடுக்க முனைந்த காவல்துறையினருக்கும், அவர்களுக்கு இடையே மோதல் எற்பட்டது. இந்த மோதலில் அங்கு பணியில் இருந்த காவல்துறையினரின் சட்டையை பிடித்து சிலர் அவர்களை தாக்கத் தொடங்கினார். இதனால், மாணவியர் விடுதி களேபரமானது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.