சென்னை: மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையக சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அறியப்படும் 5 ஆசிரியைகளை நேரில் அழைத்து வசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை முதல் விசாரணை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.