விழுப்புரம்: பாலியல் புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி ஆகியோர் விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு சிறப்பு டிஜிபிராஜேஷ்தாஸ் பெண் எஸ்.பி க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில், ராஜேஷ்தாஸ் மீது 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
இதையடுத்து, விசாரணைக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதையடுத்து விசாரணைக்கு ராஜேஸ்தாஸ் ஆஜரான நிலையில், சாட்சிகள் விசாரணை தொடங்கி உள்ளது. இதையடுத்து, குற்றம் சாட்டிய பெண் எஸ்பி, அவரது கணவர் மற்றும் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.